திருப்பல்லாண்டு வ்யாக்யானம்
பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ‘திருப்பல்லாண்டு வ்யாக்யானம்‘, தொகுப்பாசிரியர் அ. கிருஷ்ணமாச்சார்யர், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 155. நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு பெரியவாச் சான்பிள்ளை வியாக்யானம் அருளிச் செய்துள்ளார். அதில் உள்ள திருப்பல்லாண்டுக்கான வ்யாக்யானம் மட்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என்று, முதல்பாட்டு தொடங்குகிறது. இப்பாடலுக்கு பதவுரை, அவதாரிகை, வ்யாக்யானம் என ஒவ்வொன்றும் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. உச்சரிக்கும் சொல்லுக்குள்ள அர்த்தபேதங்களையும் (பொருள் வேறுபாடு) தனியாக எடுத்துரைக்கின்றார். இப்படியாக பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்… […]
Read more