சமயாதீதம்

சமயாதீதம்(அறு சமய விளக்க உரை), ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 80ரூ.

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்துள்ள சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். மனித இன சிந்தனையும் வாழ்க்கை அமைப்பு முறையும் வளர வளர இவ்விரண்டு சமயங்கள் அறுவகைசமயங்களாக விரிந்து விளங்கலாயிற்று. அதைப் பற்றிய விளக்கமே இந்நூல். சவுரம், சைவம், சாந்தேயம், வைணவம், காணபத்திய, கவுமாரம் ஆகியவை ஆறு சமயங்களாகும். சவுர சமயம் சூரியனையும், சைவ சமயம் சிவபிரானையும், சாந்தேய சமயம் சக்தியையும், காணபத்திய சமயம் கணபதியையும், கவுமார சமயம் குமாரக் கடவுளையும் வழிபடும் முறை, தெய்வத்தின் பெயராலேயே ஏற்பட்டவை. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒருவதே ஆறு சமயத்தைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் ஆயிரமாயிரம் பாடல்கள் பாடி மேற்கொண்டு, சமரச சன்மார்க்கத்தை விளக்க சமயாதீதம் என்ற பொருளில் ஒராயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். அந்நூலின் வழி விளக்கவுரைஅளித்துள்ளார் நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *