கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம் (அறுசமய விளக்க உரை), எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 120, விலை 80ரூ. ஆதிசங்கரரின் ஆறு சமயங்களை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விரிவாக, பாக்களாக பாடியுள்ளார். அந்த பாக்கள் சிலவற்றின் விளக்க உரையாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சவுரம் உள்ளிட்ட ஆறு சமயங்களுடன், குருவை சேர்த்து, சமயாதீதம் காண்கிறார் சுவாமிகள். நாகப்பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விஷம் பெறுகின்றன என்றும் (பக். 21), உருத்திரன் தேவர்கள் பட்ட துயரம் சகியாமல் கண்ணீர் விட்டதாகவும், அந்நீர் மண்ணில் விழுந்து, மரமாகி, காயாக, […]

Read more

இதிகாசங்களில் போர்க்களங்கள்

இதிகாசங்களில் போர்க்களங்கள், எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 304, விலை 250ரூ. இராமாயண, மகாபாரத போர்க்களக் காட்சிகளை கம்பனுடைய பாடல்களிலிருந்தும், வில்லிப்புத்தூர் ஆழ்வாரின் பாடல்களிலிருந்தும் மிகவும் சுவைபட வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர். இராமனுடன் 70 வெள்ளம், ராவணனுடன் ஆயிரம் வெள்ளம் படையும் இருந்தது என்று கூறி வெள்ளத்தின் எண்ணிக்கையை விவரிக்கும் போது உண்மையிலேயே மூச்சு முட்டுகிறது. இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யும் இடத்துக்குள் லட்சுமணன் செல்வதைச் சொல்லும் பாடலில் மாவாளிகள் என்ற சொல்லை வெவ்வேறு பொருள்பட 4 இடங்களில் கம்பர் பயன்படுத்தியிருப்பது […]

Read more

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம், டாக்டர் குரூப்ரியன், பேராசிரியர் அர்த்தநாரீஸ்வரன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. கபிலர், காகபுஜண்டர், போகர், பட்டினத்தார், திருமூலர், பாம்பாட்டி சித்தர், அகஸ்தியர், குதம்பைச்சித்தர் உள்பட சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் நூல். சித்தர்கள் பற்றி அறிய விரும்புவோருக்கு மிகச்சிறந்த புத்தகம்.   —-   ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம், எஸ். ஜெகத்ரட்சகன், வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, நுங்கம்பாக்கம், சென்னை […]

Read more

ஊமைத்துரை வரலாறு

ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ. இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் […]

Read more