சமயாதீதம்
சமயாதீதம் (அறுசமய விளக்க உரை), எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 120, விலை 80ரூ.
ஆதிசங்கரரின் ஆறு சமயங்களை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விரிவாக, பாக்களாக பாடியுள்ளார். அந்த பாக்கள் சிலவற்றின் விளக்க உரையாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சவுரம் உள்ளிட்ட ஆறு சமயங்களுடன், குருவை சேர்த்து, சமயாதீதம் காண்கிறார் சுவாமிகள். நாகப்பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விஷம் பெறுகின்றன என்றும் (பக். 21), உருத்திரன் தேவர்கள் பட்ட துயரம் சகியாமல் கண்ணீர் விட்டதாகவும், அந்நீர் மண்ணில் விழுந்து, மரமாகி, காயாக, உருத்திராக்கமாக ஆனது என்றும், அதை அணிவதால் உடலில் நோய் நீங்கும் என்றும் (பக். 34), திருமாலின் திருவிளையாடலாக, சிவன் ஒரு வண்டை பெண்ணாக்கி ராவணனுக்கு அளித்தார். அவளே வண்டோதரி எனும் மண்டோதரி என்றும் (பக். 62) நூலில் கூறப்பட்டுள்ளது. தண்டபாணி சுவாமிகள் திருவயிந்திரபுரத்தில் நடத்திய வினோத நிகழ்ச்சியை (பக்.69) நூலாசிரியர் சுவைபட கூறுகிறார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 19/7/2015.