உலகக் கவிஞர் தமிழ்ஒளி

உலகக் கவிஞர் தமிழ்ஒளி, மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. கவிஞர் தமிழ்ஒளியுடன் பழக வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், கவிஞரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும், படைப்புகள் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார். 1924 -ஆம் ஆண்டு பிறந்த விஜயரங்கம், கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய கல்வே கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய விஜயரங்கம், பாரதிதாசனின் மாணவராகி அவருடைய சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற புனைபெயரை வைத்துக் கொள்கிறார். 1947 – ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் […]

Read more

உலகின் இருபெரும் போர்கள்

உலகின் இருபெரும் போர்கள், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 200ரூ. புத்தகத்தின் தலைப்பு, முதல் மற்றம் இரண்டாம் உலகப் போர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதாக இருந்தாலும், இந்தப்புத்தகம் உலக வரலாறு, மனித இனத் தோற்றம், வரலாற்றில் இடம் பெற்ற வியட்நாம் போர், உள்ளிட்ட பல போர்கள், போர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்று பல விஷயங்களையும் அலசுகிறது. போர்கள் பற்றிய முழுவிவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஞான மூலம்

ஞான மூலம், அண்ணன் ஜெயகாந்தனுடன் இளமைப்பருவம்,  த.நடராஜன், வேமன் பதிப்பகம், பக்.160; விலைரூ.100. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் தம்பி எழுதிய நூல். இளமைக் காலத்திலிருந்து ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்களை இந்நூலில் அவர் பதிவு செய்துள்ளார். சிறுவயதிலேயே சண்டை போடும் குணம் ஜெயகாந்தனுக்கு இயல்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது தம்பியை (நூலாசிரியரை) நாய் கடித்துவிட்டதைத் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன், அந்த நாயை வளர்ப்பவருடன் சண்டைக்குப் போயிருக்கிறார். ‘நாயைக் கட்டிப் போட்டு வ ளர்க்க வேண்டும்; ரோட்டுல போறவங்க, வர்றவங்க எல்லாரையும் கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தீங்களா?‘ என்று கோபத்துடன் சண்டைக்குப் […]

Read more

எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனித அறிவால் அறிந்த கோள்கள் சில; அறியாத கோள்கள் பல. அனைத்து கோள்களையும், பால்வெளிகளையும் உள்ளடக்கிய கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தின் விந்தை அளப்பரியது. பயிலப்பயில வியப்பைத் தருவது. எண்ணிக்கையில் அடங்கா கோள்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் செறிந்த அறிவியல், பொருளியல் உண்மைகளைத் தமிழில் விளக்க முற்படும் நுால் இது. அகன்று விரிந்த இந்த அண்டத்தின் தோற்றம், அதன் வயது, அளவு, வடிவம், ஆய்வுகள் ஆகியவை உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு தான் […]

Read more

எல்லையில்லா பிரபஞ்சம்

எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 250ரூ. பிரபஞ்சம் வரையறைக்கு உட்படாதது. தோற்றமும் முடிவும் அற்றது. இந்த பிரபஞ்சத்தின் கீழ் அண்டவியல், சூரியக்குடும்பம், கோள்கள், நட்சத்திரம், பூமி மற்றும் அதில் இருக்கும் மலைகள், கடல்கள், எரிமலை, வாழும் உயிரினம் என அனைத்தையும் அடக்கிவிடலாம். அவை குறித்து இந்த நூலின் மதிமாறன் ஆய்வு நோக்கில் அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார். இந்த நூல் வானியல் பற்றியும் பேசுகிறது. வான்வெளி அறிவியல் சாதித்தவை குறித்தும் பேசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த […]

Read more

jk பார்வைகள் பதிவுகள்

jk பார்வைகள் பதிவுகள், தொகுப்பாசிரியர் கோ.எழில்முத்து, வேமன் பதிப்பகம், பக்.240, விலை ரூ.150. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றிய அற்புதமான பதிவு இந்நூல். ஜெயகாந்தனின் நேர்காணல்கள், நமது பண்பாடு, நமது சமயம், குடும்பம் குறித்து ஜெயகாந்தனின் சிந்தனைகள் என மறைந்த அந்த எழுத்தாளரின் நேரடியான பதிவுகள் ஒருபுறம் என்றால், ஜெயகாந்தனைப் பற்றி தமிழின் பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் இன்னொருபுறத்தில் பதிவாகியுள்ளன. ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடலூரில் முருகேசனாக இருந்த ஜெயகாந்தன், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்; […]

Read more

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்

சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம், டாக்டர் குரூப்ரியன், பேராசிரியர் அர்த்தநாரீஸ்வரன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ. கபிலர், காகபுஜண்டர், போகர், பட்டினத்தார், திருமூலர், பாம்பாட்டி சித்தர், அகஸ்தியர், குதம்பைச்சித்தர் உள்பட சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் நூல். சித்தர்கள் பற்றி அறிய விரும்புவோருக்கு மிகச்சிறந்த புத்தகம்.   —-   ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம், எஸ். ஜெகத்ரட்சகன், வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, நுங்கம்பாக்கம், சென்னை […]

Read more

இருளர்கள்

இருளர்கள், குணசேகரன், கிழக்கு பதிப்பகம், பக்கம்:128. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-808-6.html இந்திய பழங்குடி இனங்களில் அவர்களுக்கொன்று ஒரு தனி இடம் இருக்கிறது. பிறரது நிலங்களில் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரிய நாட்டமில்லை. பெண்களை கொண்டாடி, போற்றும் மரபு அவர்களுடையது. இசை மீது தீராத மோகம், சிறிதளவே இருந்தாலும், கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பு, அசாதாரண இறை பக்தி, கூர்மையான அறிவாற்றல், கொடிய விலங்குகளை […]

Read more