எல்லையில்லா பிரபஞ்சம்
எல்லையில்லா பிரபஞ்சம், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 250ரூ.
பிரபஞ்சம் வரையறைக்கு உட்படாதது. தோற்றமும் முடிவும் அற்றது. இந்த பிரபஞ்சத்தின் கீழ் அண்டவியல், சூரியக்குடும்பம், கோள்கள், நட்சத்திரம், பூமி மற்றும் அதில் இருக்கும் மலைகள், கடல்கள், எரிமலை, வாழும் உயிரினம் என அனைத்தையும் அடக்கிவிடலாம்.
அவை குறித்து இந்த நூலின் மதிமாறன் ஆய்வு நோக்கில் அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார். இந்த நூல் வானியல் பற்றியும் பேசுகிறது. வான்வெளி அறிவியல் சாதித்தவை குறித்தும் பேசுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நூலை ஆசிரியர் அழகுபட இயற்றியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017.