ஞான மூலம்
ஞான மூலம், அண்ணன் ஜெயகாந்தனுடன் இளமைப்பருவம், த.நடராஜன், வேமன் பதிப்பகம், பக்.160; விலைரூ.100.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் தம்பி எழுதிய நூல். இளமைக் காலத்திலிருந்து ஜெயகாந்தனுடனான தனது அனுபவங்களை இந்நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
சிறுவயதிலேயே சண்டை போடும் குணம் ஜெயகாந்தனுக்கு இயல்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தனது தம்பியை (நூலாசிரியரை) நாய் கடித்துவிட்டதைத் தெரிந்து கொண்ட ஜெயகாந்தன், அந்த நாயை வளர்ப்பவருடன் சண்டைக்குப் போயிருக்கிறார்.
‘நாயைக் கட்டிப் போட்டு வ ளர்க்க வேண்டும்; ரோட்டுல போறவங்க, வர்றவங்க எல்லாரையும் கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தீங்களா?‘ என்று கோபத்துடன் சண்டைக்குப் போன ஜெயகாந்தனை அவரின் வயது முதிர்ந்த காலத்திலும் சந்திக்க முடிகிறது.
அப்படி அடிக்கடி அவர் சண்டை போட்டதனால்தான் அவரின் படிப்பை நிறுத்திவிட்டு, சென்னை ‘ஜனசக்தி‘ அலுவலகத்தில் அவரை வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கின்றனர். பின்னர் அதுவே அவருக்குக் கல்வி தரும் பல்கலைக்கழகமாகியிருக்கிறது.
வானந்தம், பாலதண்டாயுதம், மோகன் குமாரமங்கலம் போன்ற தலைவர்களுடன் பழகும் வாய்ப்பும் ஜெயகாந்தனுக்குக் கிட்டியிருக்கிறது. சிறந்த எழுத்தாளராக மலர்வதற்கான சூழ்நிலையும் அவருக்கு வாய்த்திருக்கிறது.
நூலின் இறுதியில் இதுவரை எந்த நூலிலும் தொகுக்கப்படாத வானொலி உரை ஒன்றும், தினமணி கதிரில் வெளிவந்த ஜெயகாந்தனின் நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. எழுத்தாளனின் கடமை, எழுத்தின் நோக்கம் பற்றியெல்லாம் ஜெயகாந்தன் கொண்டிருந்த அற்புதமான கருத்துகள் அவருக்கேயுரிய கம்பீரமான தொனியில் வானொலி உரையிலும், நேர்காணலிலும் வெளிப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நன்றி: தினமணி, 14/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026728.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818