சித்தம் அழகியார்
சித்தம் அழகியார், சுகி.சிவம், கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.100.
சமூக அக்கறையுடன் கூடிய ஆன்மிகக் கருத்துகளை இந்த பூமியில் விதைத்து வரும் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான நூலாசிரியரின் கருத்துக் குவியலே இந்நூல்.
மனவிகாரம் உடைய இந்த மனித சமூகத்தில் ‘சித்தம் அழகியவர்கள்‘ நம் கண்களுக்குப் பளிச்சென தெரிவதை தனக்கே உரித்தான பாணியில் 24 தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
இறையடியார்கள் எந்தப் புகழுக்கும் மயங்காதவர்கள். அவர்கள் ஆணவம் தலைக்காட்டாது அடக்கம், பணிவு, எளிமை, ஒடுக்கம் உள்ளிட்ட பண்புகளின் உறைவிடமாய் திகழ்பவர்கள். அப்படிப்பட்ட உதாரண புருஷர்கள்தான் சித்தம் அழகியாராய் தெரிவதை தனக்கே உரிய பாணியில் நூலாசிரியர் எடுத்துரைத்திருக்கும் பாங்கு, ஒரே மூச்சில் நூலை படித்துவிடும் பேரார்வத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்வின் இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப இறைவனை மதிப்பதையும், நிந்திப்பதையும் குணமாகக் கொண்ட சாதாரண மனிதர்களுக்கிடையே, எல்லாமே கடவுள் தரும் பிரசாதம் என ஏற்றுக்கொள்பவர்கள்தான் சித்தம் அழகியார் என்பதை நமக்கு இந்நூல் எடுத்துரைக்கிறது.
சித்தவிகார மனிதர்கள் பிற உயிர்க்குத் தீங்கிழைக்கிறார்கள். சித்தம் அழகியாரோ பிற உயிர் துயர்கண்டு நடுங்கி விடுகிறார்கள். "களிமண்ணும், கல்லும் கடவுளாவது உருவ வழிபாட்டின் நோக்கமே அன்று. நான் படைப்பவன் என்ற அகங்காரத்துடன் சிலை செய்துவிட்டு, நீ என்னைப் படைத்தவன் என்று கும்பிடும்போது நம்முள் ஏற்படும் ரசவாதமே ஆன்மிக அற்புதம்' என அழகாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 14/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026606.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818