இருளர்கள்
இருளர்கள், குணசேகரன், கிழக்கு பதிப்பகம், பக்கம்:128. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-808-6.html
இந்திய பழங்குடி இனங்களில் அவர்களுக்கொன்று ஒரு தனி இடம் இருக்கிறது. பிறரது நிலங்களில் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரிய நாட்டமில்லை. பெண்களை கொண்டாடி, போற்றும் மரபு அவர்களுடையது. இசை மீது தீராத மோகம், சிறிதளவே இருந்தாலும், கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பு, அசாதாரண இறை பக்தி, கூர்மையான அறிவாற்றல், கொடிய விலங்குகளை கூட, சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார்கள். ஆனால், நாகரிக மனிதர்களை கண்டால் மட்டும் அஞ்சி பின் வாங்குவார்கள். அவர்கள் தான் இருளர்கள். இந்தநூலில், இருளர் இன மக்களின், வண்ண மயமான கலாசாரம், பிரமிக்க வைக்கும் பண்பாடுகளால் அமைந்த, தனித்துவ உலக்கத்தை ஆசிரியர் குணசேகரன் படம் பிடித்துள்ளார். இருளர்கள் குறித்து பல்வேறு தலைப்பில் நூல்கல் வெளிவந்தாலும், அவர்களுடைய அசாதாரண வாழ்க்கையை, உள்ளது உள்ளபடியே உரைத்த விதத்தில் இந்நூல் நம் கவனத்தை ஈர்க்கிறது.
—-
திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள், பின்னலூர் விவேகானந்தன், வேமன் பதிப்பகம், நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, பக்கம்: 200, விலை ரூ.125.
வழக்கறிஞரான ஆசிரியர், பரிசு பெற்ற பல நூல்கள் எழுதிய சிறப்பு பெற்றவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய ஆசிரியர், மண்ணும் மானுடமும் பயன்பெற இந்தநூலை எழுதியதாக முன்னுரையில் சுட்டிக்காட்டியதை, இந்த நூலை படிக்கும்போது உணரமுடிகிறது. ‘மாணவர்களை ஆசிரியர் அடிக்கலாமா’ என்பது இன்று விவாதப்பொருள். தன் அண்ணன் மகன் ஆசிரியரிடம் அடி வாங்கிக் கலங்கியபோது, அந்த ஆசிரியருக்கு இராமலிங்கர், எழுதிய பாடலில், ‘சிறுவர்களை அடிப்பதும் நன்றல என்மேல் ஆணை’ என்பதைக்குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் தந்த விதம் சிறப்பானது. அந்த ஆசிரியரை வள்ளாலார் தன் கவிதையில், ‘தூயமன சுந்தரப் பேருடையாய்’ என்று அழைத்திருக்கிறார். அவர் பெயர் சுந்தரம்பிள்ளை. இது மட்டுமல்ல, இராமலிங்கர் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள் என்றும் திருமண நாளன்று முதலிரவில் மணிவாசகரின் திருவாசகத்தை அடிகளார் படிக்க, அவர் கேட்டு பரவசமடைந்தார் என்ற தகவலும் உண்டு. அதை, அடிகளார் தன் பாடலில் ‘குனித்த மற்றவரை தொட்டனன் அன்றி கலப்பிலேன்’ என்று கூரியதை பதிவு செய்துள்ளார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உட்பட பல மாமனிதர்களை, அடிகள் சந்தித்தையும் இந்த நூலில் காணலாம். இராமலிங்கரின் ’திருவருட்பா’ வை மருட்பா என்று கூறி, வழக்கு தொடுத்த சைவ ஆறுமுக நாவலர் வழக்காடு மன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையையும், அத்தீர்ப்பு பற்றியும் எழுதிய பாங்கு, தன் தொழிலில் ஆசிரியருக்கு உள்ள மதிப்பை காட்டுவதாகும் (பக்கம் 83). ‘விழித்திரு’ என்பது ‘தூங்காது இருத்தல் அல்ல; சிந்தனை, செயலில், பேச்சில் விழித்திருக்க சொன்ன வாசகம் என்றும், அதற்கு ஆதாரமாக’ துயிலைத் தடுப்பது நூறு’ என்ற ஞானசம்பந்தரது தெய்வீக தேவாரத்தை சுட்டிக்காட்டியிருப்பதை, இந்த நெறி வரவும் தொண்டர்கள் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை. பாண்டியன்.
—-
காதல் பேசும் கடிதங்கள், நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அண்ட் கோ, சென்னை – 600 045,பக்கம்:184, விலை: ரூ.120.
காதல் கவிதைகளுடன், சமூகம் சார்ந்த சிந்தனைகளையும், நீதிபதி தன் கவிதைகளில் சிறப்பாக எழுதியிருக்கிறார். அதற்கு ஓர் கவிதை, சென்னையின் கூவம் பற்றி ஆசிரியர் எழுதிய கவிதையாகும். அதில், ‘கூவத்தை சீரமைப்போம் என்றே சொல்வர்/ குவலயத்து கழிவுகளை என்னுள் சேர்ப்பர்/ மூவுலகம் குமட்டுகின்ற கொடிய நாற்றம்/ மூண்டுவிட என் பிறவி கொடிய பாவம்… என்று குறிப்பிட்டு, நிலைமையை அப்படியே விளக்குவது அருமை. கவிதைப் பிரியர்களுக்கு நல்விருந்து. நன்றி: தினமலர் சென்னை (24-03-2013).