அரவாணியம்
அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ.
அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.
—-
சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ.
பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தாமிரபரணியை மையமாக வைத்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்த வரிசையில் அகத்தியரின் அருள்பெற ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் பொதிகை மலை பற்றி இப்புத்தகத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.
—-
கம்பரிடம் ம.பொ.சி. கற்ற அரசியல், பூங்கொடி பதிப்பகம், 14, சித்தரைக்குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை 4, விலை 85ரூ.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் படைத்த ராமாயண காப்பியத்தில் மனதை பறிகொடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். அவர் கம்பர் விழாக்களில் கலந்து கொண்டு பேசிய சொற்பொழிவுகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல் கம்பரிடம் யான் கற்ற அரசியல். எத்தனையோ வகையான அரசியல் நெறிகளை நியதிகளை கம்பரிடம் பல கோணங்களில் காண முடிகிறது என்கிறார். அறநெறிகளை அழித்துத்தான் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்றால் அதைவிட அதிகாரத்தை துறப்பதே அரசியல் நெறி என்று கம்பர் கூறியதை ஆணித்தரமாக ஆமோதித்து இலக்கிய ரசிகர்களுக்கு ஏற்ற இனிய விருந்தாக படைத்துள்ளார் ம.பொ.சி. நன்றி: தினத்தந்தி 09 ஜனவரி 2013.