தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ.

எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது குறித்து வைத்ததை தொகுத்து நூலாக்கியுள்ளார். அதை எளிய தமிழிலும் கொடுத்துள்ளார்.  இசை இளைய தலைமுறையை தட்டி எழுப்பும் சிந்தனை துளிகள். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.  

—-

குமுதினி, பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி, விலை 50ரூ.

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழ எழுத்தாளர் குமுதினி (ரங்கநாயகி தாத்தம்) வாழ்க்கை வரலாற்றை சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. பிரேமா நந்தகுமார் சுவைபட எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.

Leave a Reply

Your email address will not be published.