ஜீவன் லீலா

ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385. இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும் காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய […]

Read more

குரு கோவிந் சிங்

குரு கோவிந் சிங், மஹீப் சிங், தமிழாக்கம் – அலமேலு கிருஷ்ணன், சாகித்ய அகாடமி, விலை: ரூ.50. சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கைப் பற்றிய நூல் இது. 15-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள குரு கோவிந்த் சிங் இலக்கியம், ஆன்மிகம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளை விரிவான சான்றுகளுடன் இந்த நூல் விவரிக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more

சிங்காரவேலவர்

சிங்காரவேலவர், பா.வீரமணி, சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. அறிவியல் சிந்தனை வளர விரும்பியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்வும் பணியும் பற்றிய இந்நுால், சிங்காரவேலரின் ஆற்றல்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறது. சிங்காரவேலர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, ஒவ்வொரு தகவலும் ஆசிரியரால் நுண்ணிய நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நுால் சிங்காரவேலருக்கு இருந்த பேரும் புகழும் பற்றிய எளிய நடையில் கட்டுரையாசிரியர் எழுதிச் செல்கிறார். திரு.வி.க., சிங்காரவேலரின் மாணாக்கராகத் தம்மை வரித்துக் கொண்டதை தம் வாழ்க்கைக் குறிப்பில் குறித்திருப்பதை நுாலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். […]

Read more

ஆசிர்வாதத்தின் வண்ணம்

ஆசிர்வாதத்தின் வண்ணம், அருண்சர்மா, எம். சுசீலா, சாகித்ய அகாடமி, பக். 366, விலை 225ரூ. சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின் உள்ளம், பழக்க வழக்கங்கள், கிராமிய பண்பாடு என, அங்குலம் அங்குலமாக அசாமியர்களின் வாழ்வியலை வர்ணிக்கிறது. வானொலி நிலைய மைய இயக்குனராக இருந்த அருண் சர்மா, இந்நாவலை, சாதாரண இளைஞரின் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினமலர், 11/1/2018.  

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர்கள் இரா.காமராசு, சேதுபதி, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன், ஆ. பூமிச்செல்வம், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் எழுத்தாளராக நிலை கொண்டவர். திருவனந்தபுரம், ‘மார் இவானியஸ்’கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். நகுலன், நவீனன், எஸ்.நாயர், ஜான் துரைசாமி என பல பெயர்களில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என, நவீனத் தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதியவர். ஆங்கிலத்திலும் […]

Read more

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள்

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள், இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 115ரூ. மொழியின் ஆளுமையில், இன்று வட்டார மொழிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. புதினம், சிறுகதைகளின் நேர்முகப் பதிவே வட்டார மொழிகளை உயர்த்துகின்றன. தஞ்சை வட்டார எழுத்துக்களை வண்டல் என்ற எல்லைக்குள் வைத்து நிகழ்த்திய உரையரங்கின் தொகுப்பே இந்நூல் ஆகும். திறனாய்வாளர்கள் தஞ்சை வட்டார வழக்குகள் பற்றிய மதிப்பீட்டையும், படைப்பாளர்களின் குரலையும் இங்கு பதிவு செய்துள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ் படைப்புகள், பாவை சந்திரனின் நல்ல நிலம், சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் […]

Read more

பெண்களின் அகவுலகம்

பெண்களின் அகவுலகம், ஆர். சூடாமணி, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. தனித்துவமான மொழி நடையைக் கொண்டிருந்த எழுத்தாளுமை ஆர். சூடாமணி. 1954 முதல் 2004 வரை அரை நூற்றாண்டு காலம் படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். பெண்களின் அகவுலகத்தைப் பற்றிப் பேசியதில் முதன்மையானவரான இவரின் கதைகள், மானுட மேன்மையோடு உளவியல் நுட்பங்களையும் உள்வாங்கி எழுதப்பட்டவை. 7 நாவல்கள், 8 குறுநாவல்கள், 19 சிறுகதைத் தொகுப்புகள் என தனது பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கும் எழுத்தாளர். ஆர். சூடாமணியின் படைப்பாளுமையைப் பற்றி கச்சிதமாக எழுதியிருக்கிறார் பேராசிரியர் கே. […]

Read more

கவிஞர் பாலா

கவிஞர் பாலா, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக சாகித்ய அகாடமி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் பாலா பற்றிய புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணிபுரிந்தவர் கவிஞர் பாலா. இந்தியாவின் இலக்கியச் சிறப்பு பற்றி வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். “புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை” உள்பட பல நூல்கள் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more
1 2 3 5