இந்திரநீலம்

இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ. பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400. நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி, விலைரூ.400. வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பது புரிந்து விடுகிறது. கூடுதல் விளக்கமாக நாவலின் காலமாக 1950 என்னும் தகவலையும் தந்து விடுகிறார். நெசவாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடு நுாலாகவும், பாவு நுாலாகவும் இணைந்து இயங்குகிறது நாவல். ஏழ்மை வாழ்க்கையில் ஒரு நிறைவுடன் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார். நடராஜன் என்ற பாத்திரத்தை, 43 அத்தியாயங்களில் நிலை நாட்டியுள்ளார். கதைப் போக்கில் 1950களின் அரசியல் […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more