சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400. நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி, விலைரூ.400. வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பது புரிந்து விடுகிறது. கூடுதல் விளக்கமாக நாவலின் காலமாக 1950 என்னும் தகவலையும் தந்து விடுகிறார். நெசவாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடு நுாலாகவும், பாவு நுாலாகவும் இணைந்து இயங்குகிறது நாவல். ஏழ்மை வாழ்க்கையில் ஒரு நிறைவுடன் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார். நடராஜன் என்ற பாத்திரத்தை, 43 அத்தியாயங்களில் நிலை நாட்டியுள்ளார். கதைப் போக்கில் 1950களின் அரசியல் […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more