இந்திரநீலம்
இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ.
பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை விரசம் இல்லாமல் சொல்லி இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி,28/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818