சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர்கள் இரா.காமராசு, சேதுபதி, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், […]

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more