ஜீவன் லீலா
ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385.
இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும்
காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய அகாடமி வெளியிட்டது. தமிழில் 1971-ல் முதல் பதிப்பும் 1986-ல் இரண்டாம் பதிப்பும் கண்ட ‘ஜீவன் லீலா’ 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் மூன்றாம் பதிப்பு கண்டுள்ளது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘இரு சென்னைச் சகோதரிகள்’ என்னும் கட்டுரையில் சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆறுகள் குறித்து எழுதியுள்ளார் காலேல்கர்.
நன்றி: தமிழ் இந்து, 23/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031991_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818