கவிஞர் பாலா
கவிஞர் பாலா, சாகித்ய அகாடமி, விலை 50ரூ.
இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக சாகித்ய அகாடமி வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் கவிஞர் பாலா பற்றிய புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணிபுரிந்தவர் கவிஞர் பாலா. இந்தியாவின் இலக்கியச் சிறப்பு பற்றி வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். “புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை” உள்பட பல நூல்கள் எழுதி உள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.