செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்
செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ.
நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள்.
அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும்வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது.
‘என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் தூண்டுகிற போது ‘என்ன ஒரு வித்வத்துவம்’ எனவும் மலைக்க வைக்கிறது. இந்தக் கவிதைகளை படிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட மனோநிலை வேண்டும் என்கிற அவசியமில்லை. யாரும் படிக்கலாம். நல்ல படைப்பில் கலைஞன் காணாமல் போவதும் நடக்கும்.
நன்றி: குங்குமம், 30/12/2017.