ஆமுக்த மால்யத
சூடிக்கொடுத்தவள் (ஆமுக்த மால்யத), டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 200ரூ.
தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் இருப்பதைப் போன்று தெலுங்கிலும் ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. மனுசரித்ரம், வசுசரித்ரம், ஆமுக்த மால்யத, பாரிஜாதாபகர்ணம், ச்ருங்கார நைஷதம் ஆகிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஆமுக்த மால்யத.’ இந்த நூல், ஆண்டாளின் அவதாரத்தை மட்டும் சொல்லவில்லை. இப்பெருமாட்டியை வளர்த்த விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்வதும் ஆகும். அதனால் விஷ்ணுசித்தீயம், ஆமுக்த மால்யத ஆகிய இரு காப்பியங்கள் இணைந்த பெருங்காப்பியம் என்று இதனைக் குறிப்பிடலாம். கிருஷ்ண தேவராயர் இயற்றிய ஒரே சமயம் சார்ந்த இரட்டைக் காப்பியம் இந்நூலாகும். தெலுங்கு ஆமுக்த மால்யத நூலில் நிறையச் சந்தங்கள் உள்ளன. அது கவிதை வடிவிலானது. இத்தமிழ் மொழிபெயர்ப்பு உரைநடை வடிவிலானது. எளிய உரைநடையை மேலும் எளிமையாக உணரும் வண்ணம், ஈர்க்கும் இனிய தலைப்புகளை. ஒவ்வொரு பாடலுக்கும் கொடுத்து இந்நூலில் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார் டாகட்ர் எஸ். ஜெகத்ரட்சகன். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.