வெற்றி தரும் மேலாண்மை

வெற்றி தரும் மேலாண்மை, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 150ரூ.

ஒரு நிறுவனத்தில் இயக்குநராக மேலாளராக இருப்பவர்களுக்கு மேலாண்மைத் திறன் அவசியம் தேவை. இதனால் இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப மேலாண்மை யுக்திகளை சரியாக இனம் கண்டு கொள்வது தொழில் நிறுவனங்களின் கடமையாகும். அந்த வகையில் மேலாண்மைத் துறை தொடர்பான நுட்பமான செய்திகளை நெல்லை கவிநேசன் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்வகையில் இந்த நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் இந்நூல். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.  

—-

சட்டக் கேள்விகள் 100, வக்கீல் வெ. குணசேகரன், லாயர்ஸ் லைன், சட்ட புத்தக பதிப்பாளர், விலை 120ரூ.

சட்டம் தொடர்பாக பொதுமக்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு வக்கீல்கள் அளித்த பதில்களின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *