அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ.

சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, அதன் அமைப்பைச் சொல்லி, அதற்குப் பிறகு அவர் குணாதிசயம் சொல்லி, பிறகு கதையை நகர்த்துகிறார். தேர்ந்த எழுத்தாளனின் கைவண்ணம் இது. கதை சொல்லுகின்ற நேர்த்தியால், அது என்ன சொல்கிறது என்ற விளக்கத்தால் இந்த மொத்த தொகுப்பும் கம்பீரமடைகிறது. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.  

—-

வானொலித் தகவல்கள் 2, கீதம் பப்ளிஷர்ஸ், விலை 110ரூ.

வானொலியில் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிய நடையில் தனது இயல்பான பேச்சில் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். வானொலியில் பகிர்ந்து கொண்ட 41 தலைப்பிலான தகவல்கள் நூலாக வடிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *