பெண்ணியம் அகலமும் ஆழமும்
பெண்ணியம் அகலமும் ஆழமும், பேராசிரியர் இரா. பிரேமா, காவ்யா, விலை 1100ரூ.
பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமுதாயத்தில் பரவலாக பரவி வருகிறது. பெண்களை அடிமைத் தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வூட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் இரா. பிரேமா படைத்துள்ளார். எது பெண்ணியம்? வெளிநாட்டு மற்றும் இந்திய பெண்ணிய கோட்பாளர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கணம், இலக்கியம் மற்றும் காப்பியங்களில் பெண்களின் நிலை, கற்பு கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் விளக்கமாக ஆராய்ந்துள்ளார். பெண்ணியம் பற்றி முழுமையாக தமிழில் எடுத்துரைக்கும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும். பெண்ணியம் பற்றிய விரிவான கையேடு. உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.
—-
அறிந்து கொள்வோம், டாக்டர் க.அ. அருள்செங்கோர், தமிழ்க்கோட்டம், விலை 80ரூ.
ஞாபக மறதி, வலி, சோம்பல், பசி முதலியவை எப்படி ஏற்படுகின்றன? இரட்டைக் குழந்தைகள் பிறப்பது ஏன்? மனிதத் தோலில் நிறமாற்றம் ஏற்படுவது எதனால்? இப்படி பல சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வமாக பதில் கூறுகிறார் டாக்டர் க.அ. அருள் செங்கோர். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.