ஆயிரம் கவிதைகள் மலரட்டும்

ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்னை வெளியீடு, பக். 180, விலை 120ரூ. சிற்றிதழாளர்கள், அவர்களின் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும் நாள்தோறும் பூக்க வேண்டும் என்பது நூலாசிரியர் விருப்பம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வுமையம், பக். 196, விலை 70ரூ. நாடகங்களில் ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டும் தனியாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இதனை கற்பவர்கள் […]

Read more

ஆமுக்த மால்யத

சூடிக்கொடுத்தவள் (ஆமுக்த மால்யத), டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 200ரூ. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் இருப்பதைப் போன்று தெலுங்கிலும் ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. மனுசரித்ரம், வசுசரித்ரம், ஆமுக்த மால்யத, பாரிஜாதாபகர்ணம், ச்ருங்கார நைஷதம் ஆகிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஆமுக்த மால்யத.’ இந்த நூல், ஆண்டாளின் அவதாரத்தை மட்டும் சொல்லவில்லை. இப்பெருமாட்டியை வளர்த்த விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்வதும் ஆகும். அதனால் விஷ்ணுசித்தீயம், ஆமுக்த மால்யத ஆகிய இரு காப்பியங்கள் இணைந்த பெருங்காப்பியம் என்று இதனைக் குறிப்பிடலாம். […]

Read more