ஆயிரம் கவிதைகள் மலரட்டும்
ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்னை வெளியீடு, பக். 180, விலை 120ரூ.
சிற்றிதழாளர்கள், அவர்களின் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும் நாள்தோறும் பூக்க வேண்டும் என்பது நூலாசிரியர் விருப்பம்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 18/4/2016.
—-
ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வுமையம், பக். 196, விலை 70ரூ.
நாடகங்களில் ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டும் தனியாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இதனை கற்பவர்கள் மூல நூலுக்குள் புகுந்து பேரின்பம் பெற உதவக்கூடும்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 18/4/2016.