தாயுமான சுவாமிகள் பாடல் உரை
தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ.
இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் அழகிலே இறைவனைக் காணும் அவர் பூப்பறிக்காமல் திரும்புவதை, “ஆங் பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனி மலர் எடுக்க மனமும் நண்ணேன்” என்கிறார். இது போன்ற இனிய இறையுணர்வுப் பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.
—-
ஷேக்ஸ்பியர் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 70ரூ.
மானுட சமூகத்தையே நாடக அரங்கில் ஏற்றிக்காட்டிய படைப்புச் சிற்பி ஷேக்ஸ்பியரின் சிந்தனை துளிகளை அகர வரிசையில் தொகுத்து அளித்திருக்கிறார் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.