மயில்
மயில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம், விலை 350ரூ.
அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இசை, இலக்கணம், இலக்கியம், சமயம், சமூகவியல், செவ்வியல், இலக்கியம், தகவலியல், நாட்டுப்புறவியல், புதினம், வரலாறு என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் சமுதாய மக்களுக்குப் பயன் தருவனவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பதிப்பித்து இருக்கிறார்கள் முனைவர் இராச. கலைவாணியும், முனைவர் வாணி அறிவாளனும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.
—-
மு.வ. வாசகம், பேராசிரியர் முனைவர் இரா. மோகன், சாகித்திய அகாதெமி, விலை 190ரூ.
மு.வ. என்ற இரண்டு எழுத்துக்களால் மதிப்போடும், மரியாதையோடும் அழைக்கப்பெறும் மு. வரதராசனார் 20-ம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் குறிப்பிடத்தக்கவர். சிறுவர் இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, மொழியியல், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு என்றாற்போல் பல்வேறு துறைகளைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்த பெருமைக்கு உரியவர். ‘குழந்தை பாராட்டுக்கள்’ (1939) என்னும் முதல் நூலில் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம், ‘நல்வாழ்வு’ (1973) என்னும் இறுதி நூலில் நிறைவு பெற்றது. ‘திருக்குறள் தெளிவுரை’ என்பது 200க்கும் மேற்பட்ட பதிப்புகளைக்கண்டு இன்றளவும் மு.வ.வின் பெருமையைப் பறைசாற்றி வரும் நூல். தெளிந்த எழுத்தும், திட்டமிட்ட வாழ்வும், தொலைநோக்குப் பார்வையும் மு.ப.வி.ன் தனித்த ஆளுமைப்பண்புகள், மு.வ.வின் பன்முகத் திறன்களையும், பரிமாணங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பேராசிரியர் முனைவர் இரா.மோகன். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.