மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்,  வெ. இறையன்பு, விகடன் பிரசுரம், விலை 140ரூ.

மனித உடல் பல விசித்திரங்களின் தொகுப்பு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் விதத்தில் இந்த நூலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ. இறையன்பு எழுதியுள்ளார். கண்கள் பேசும் மொழி, முடியைப் பற்றி நாம் இதுவரை அறியாத சில செய்திகள், புருவத்தின் மூலம் நாம் வெளிப்படுத்தும் பலவிதமான உணர்ச்சிகள் போன்ற நாம் அறிந்திராத புதிய செய்திகளைக் கூறி நம் விழிகளை வியக்க வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.  

—-

நேரம்+நிர்வாகம்=வெற்றி, காவிரிமைந்தன், கங்கை புத்தக நிலையம், விலை 50ரூ.

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பதை மையமாக வைத்து நேரம்+நிர்வாகம்=வெற்றி என்பதை நூலாக்கி நேரத்தை நமது நிர்வாகத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை மிகக் கச்சிதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *