கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்
கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கோ.வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 900ரூ.
வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்துக்கு கவிதை அழகு மிக்க வர்ணனைகளுடன் புதுவடிவம் கொடுத்த கம்பரின் அற்புதத் திறமையால், ராமாயணம் என்றாலே கம்பராமாயணம் என்று கூறும் அளவுக்கு பெருமை பெற்ற கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திற்கு, மிகச் சிறப்பான தெளிவுரையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அயோத்தியா காண்டத்தில் இடம் பெற்ற அனைத்து கவிதைகளுக்கும் விரிவான தெளிவுரையும், விளக்கமும் கொடுத்து இருப்பதுடன், கடினமான சொற்களுக்கான அர்த்தத்தையும் தந்து இருப்பதால், கம்பரின் காவிய சுவையை முழுமையாக அறிந்து இன்புற முடிகிறது. அனைவரும் படித்து பயன்பெறும் வகையில், கம்பராமாயணத்தை எளியமுறையில், அதே சமயம் காவிய ரசம் குறையாமல் சுவைபட தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.
—-
சுவாமி விவேகானந்தரின் 150 அறிவுரைகள், மு. சீனிவாசவரதன், மந்தாகனி பதிப்பகம், விலை 70ரூ.
இளைஞர்களின் எழுச்சிக்கு விவேகானந்தரின் அறிவுரைகளை விளக்கும் 50 குட்டிக்கதைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.