தோன்றியது எப்படி?
தோன்றியது எப்படி?, தனலெட்சுமி பதிப்பகம், விலை 375ரூ.
காகிதம், பேனாக்கத்தி, காலனி, கத்தரிக்கோல், காக்குலேட்டர் (கணக்கிடும் கருவி), போன்ற எண்ணற்ற பொருட்களை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்படி, யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயம் தெரியாது. இந்த நூலில் நாம் பயன்படுத்தும் 137 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை வாண்டு மாமா தருகிறார். இவை வெறும் பொழுதுபோக்காக படிக்கப்படும் விஷயங்கள் அல்ல. அறிவை வளர்க்கும் சுவாரசியமான தகவல்கள். மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.
—-
பாதச்சுவடுகள், பா. சிவன்பாரதி ராமச்சந்திரன், கபீஷ் பப்ளிஷர்ஸ், விலை 30ரூ.
நூலாசிரியர் தொகுத்துள்ள கவிதை வரிகள் வெறும் வரிகள் இல்லை. அவை உணர்வு அலைகளை தூண்டும் பொறிகளாகவே காணப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.