பாரதியின் தசாவதாரம்

பாரதியின் தசாவதாரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு-2021), நெல்லை சு.முத்து, கங்கை புத்தக நிலையம், பக்.212, விலை ரூ.160. பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பாரதியின் பன்முகத்தன்மை. ஆன்மிக வாதிகளுக்கு அவர் எழுதிய கவிதைகள் பிடிக்கும். தேசபக்தி உடையவர்களுக்கும் பாரதி ஒரு முன்மாதிரி. புரட்சிகர சிந்தனை உடையவர்களுக்கும் பிடித்தமான கவிதைகளைப் பாரதி படைத்திருக்கிறார். பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளிகள் தமிழில் தோன்றி தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர். புரட்சிகர சிந்தனைக்கு பாரதிதாசன், தேசபக்திக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சக்தி வழிபாட்டுக்கு ச.து.சுப்ரமணிய யோகியார், […]

Read more

பிறவி என்பது?

பிறவி என்பது?, சம்பத்குமார், கங்கை புத்தக நிலையம், விலை 180ரூ. அமானுஷ்யமான விஷயங்களைப் படிப்பது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நாம் பூமியில் பிறந்தது எதற்காக? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? என்பது போன்ற பல விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. மறு பிறப்பு உண்டா, சொர்க்கம் நரகம் என்பவை உண்டா போன்ற விஷயங்களும் 103 சிறு சிறு கட்டுரைகளில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

யாதுமாகி நின்றாள்

யாதுமாகி நின்றாள், சுப்ர.பாலன், கங்கை புத்தக நிலையம், விலை 150ரூ. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் குடி கொண்டு இருக்கும் ஆன்மிகத் தலங்களுக்கு ஆசிரியர் சென்று வந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027763.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

கோதை சொல் அமுதம்

கோதை சொல் அமுதம், க.துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், விலை 70ரூ. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ சமயங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருத்தி. அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள். பரந்தாமன் மேல் அவள் கொண்ட பக்தியாகிய காதல், தமிழ்ப் பாசுரங்களாக மலர்ந்தன. அவை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் தங்கத் தாம்பாளத்தில் மின்னும் வைரங்களாகும். நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

அல்லல் தீர்க்கும் அமிராமி

அல்லல் தீர்க்கும் அமிராமி, க. துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், பக்.340, விலை ரூ.225. சக்தி வழிபாட்டில் பாராயணம் செய்ய, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மிகவும் மந்திரசக்தி வாய்ந்த இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறமுடியும். அம்பிகையின் அருள்பெற்ற அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் அபிராமி பட்டர். இவர், முன்செய் தவத்தாலும், அன்னை அபிராமியின் பெருங்கருணையாலும் ஆட்கொள்ளப்பட்டு, இப்பாமாலையை அருளிச் செய்துள்ளார். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் […]

Read more

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2

அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் – 2, கொன்றைவேந்தன், இல. பழனியப்பன், கங்கை புத்தக நிலையம், விலை 110ரூ. அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தன் நம் வாழ்வுக்கு தேவையான நன்னெறிகளை எடுத்துக் கூறுகிறது. அதன் கருத்துகளை எளிய மொழி நடையில் அனைவரும் புரியும் வகையில் இல.பழனியப்பன் அழகுற எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

முருகன் திருவிளையாடல்

முருகன் திருவிளையாடல், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம், விலை 130ரூ. இந்த நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள், சிவபக்தியின் களஞ்சியமாகத் திகழ்வதுடன், முருகப் பெருமான் புரிந்த திருவிளையாடல்களும் பக்தர்களின் நெஞ்சை உருக்கிப் பரவசம் தரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- ஒப்பனைக்காரன், இள. அழகிரி, நக்கீரன் வெளியீடு, விலை 200ரூ. ஏவி.எம். ஸ்டூடியோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக “மேக்கப்மேன்” ஆகப் பணியாற்றியவர் எஸ். முத்தப்பா. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ரஜிகாந்த், கமல்ஹாசன் உள்பட எல்லா பிரபல நட்சத்திரங்களுக்கும் “மேக்கப்” போட்டவர். […]

Read more

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்,  வெ. இறையன்பு, விகடன் பிரசுரம், விலை 140ரூ. மனித உடல் பல விசித்திரங்களின் தொகுப்பு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கும் விதத்தில் இந்த நூலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ. இறையன்பு எழுதியுள்ளார். கண்கள் பேசும் மொழி, முடியைப் பற்றி நாம் இதுவரை அறியாத சில செய்திகள், புருவத்தின் […]

Read more

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி, சதானந்தன் பேப்பர் மார்ட், சென்னை, விலை 100ரூ. சிவாஜிகணேசன், விளம்பரப்படுத்திக் கொள்ளமல் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்று கூறுகிறார் நூலாசிரியர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம். சிவாஜி வழங்கிய நன்கொடைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார். புத்தகத்தின் அமைப்பை பாராட்ட வேண்டும். ஒருபக்கம் சிவாஜியின் படம், அடுத்தபக்கம், அவரைப் பற்றிய விவரங்கள். சிவாஜியின் நவரச நடிப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் படங்களை கவனத்துடன் தேர்வு செய்துள்ளார் ஆசிரியர். சிவாஜி பல்வேறு கட்சித் தலைவர்களுடன இருக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- […]

Read more
1 2 3