நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி, சதானந்தன் பேப்பர் மார்ட், சென்னை, விலை 100ரூ. சிவாஜிகணேசன், விளம்பரப்படுத்திக் கொள்ளமல் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்று கூறுகிறார் நூலாசிரியர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம். சிவாஜி வழங்கிய நன்கொடைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார். புத்தகத்தின் அமைப்பை பாராட்ட வேண்டும். ஒருபக்கம் சிவாஜியின் படம், அடுத்தபக்கம், அவரைப் பற்றிய விவரங்கள். சிவாஜியின் நவரச நடிப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் படங்களை கவனத்துடன் தேர்வு செய்துள்ளார் ஆசிரியர். சிவாஜி பல்வேறு கட்சித் தலைவர்களுடன இருக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

வாழ்வில் வசந்தம்

வாழ்வில் வசந்தம், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 220, விலை 60ரூ. ஊக்கமளிக்கும் வாழ்வு முன்னேற்ற நூல். உழைத்தால் முன்னேறலாம். வறுமையும் வசதிக்குறையும் ஒரு தடை அல்ல. தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்று நிறுவுகிறார் ஆசிரியர். சர் ஐசக் நியூட்டன் சாதாரணக் குடியானவர் குடும்பத்தில் பிறந்தவர். மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு கூலித் தொழிலாளியின் புதல்வர். டாக்டர். ம.பொ.சி, துவக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பைக்கூட முடிக்காதவர். முடியுமா? என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, […]

Read more