வாழ்வில் வசந்தம்
வாழ்வில் வசந்தம், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 220, விலை 60ரூ.
ஊக்கமளிக்கும் வாழ்வு முன்னேற்ற நூல். உழைத்தால் முன்னேறலாம். வறுமையும் வசதிக்குறையும் ஒரு தடை அல்ல. தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்று நிறுவுகிறார் ஆசிரியர். சர் ஐசக் நியூட்டன் சாதாரணக் குடியானவர் குடும்பத்தில் பிறந்தவர். மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு கூலித் தொழிலாளியின் புதல்வர். டாக்டர். ம.பொ.சி, துவக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பைக்கூட முடிக்காதவர். முடியுமா? என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, உழைத்தால் முன்னேறலாம் என நிறுவுகிறார். -எஸ். குரு.
—-
பாரதிதாசன் கவிதைகள், வீ.வீ.கே. சுப்புராசு, சுரா பதிப்பகம், 1620 ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை 40, பக். 608, விலை 60ரூ.
பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துக் கவிதைகளையும், நான்கு தொகுப்புகளாக, ஒரே நூலில் தந்திருக்கின்றனர். பலரும் படித்துச் சுவைக்க வேண்டும், பயனுற வேண்டும் என்ற எண்ணத்தில், மலிவுப் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் பரிசளிப்பதற்கு மிகவும் ஏற்றது. -சிவா
—-
நாளும் ஒரு நாலாயிரம், மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-639-9.html
மயர்வற மதிநலம் அருளும், தேனினும் இனிய தெய்வீகப் பாடல்களான நாலாயிர திவ்யப் பிரபந்த நூலினின்று, நாள்தோறும் ஒவ்வொரு பாடலை மனனம் செய்து, நாரணன் அருளைப் பெற்று வாழ ஏற்ற வகையில், 365 பாடல்களைத் தெரிந்தெடுத்து, அரிய விளக்கங்களும் எழுதித் தொகுத்தளித்துள்ளார் செந்தமிழறிஞர் மாருதிதாசன். தினசரி பாராயணத்துக்கான இந்நூலை, மிகச் சிறந்த கட்டமைப்பில் வெளியிட்டுள்ளனர். -பவானி மைந்தன். நன்றி: தினமலர், 30/10/2011.