பாரதியின் தசாவதாரம்

பாரதியின் தசாவதாரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு-2021), நெல்லை சு.முத்து, கங்கை புத்தக நிலையம், பக்.212, விலை ரூ.160. பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பாரதியின் பன்முகத்தன்மை. ஆன்மிக வாதிகளுக்கு அவர் எழுதிய கவிதைகள் பிடிக்கும். தேசபக்தி உடையவர்களுக்கும் பாரதி ஒரு முன்மாதிரி. புரட்சிகர சிந்தனை உடையவர்களுக்கும் பிடித்தமான கவிதைகளைப் பாரதி படைத்திருக்கிறார். பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளிகள் தமிழில் தோன்றி தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர். புரட்சிகர சிந்தனைக்கு பாரதிதாசன், தேசபக்திக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சக்தி வழிபாட்டுக்கு ச.து.சுப்ரமணிய யோகியார், […]

Read more