பாரதியின் தசாவதாரம்
பாரதியின் தசாவதாரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு-2021), நெல்லை சு.முத்து, கங்கை புத்தக நிலையம், பக்.212, விலை ரூ.160.
பாரதியாரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதற்குக் காரணம் பாரதியின் பன்முகத்தன்மை. ஆன்மிக வாதிகளுக்கு அவர் எழுதிய கவிதைகள் பிடிக்கும். தேசபக்தி உடையவர்களுக்கும் பாரதி ஒரு முன்மாதிரி. புரட்சிகர சிந்தனை உடையவர்களுக்கும் பிடித்தமான கவிதைகளைப் பாரதி படைத்திருக்கிறார். பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளிகள் தமிழில் தோன்றி தடம் பதித்துச் சென்றிருக்கின்றனர்.
புரட்சிகர சிந்தனைக்கு பாரதிதாசன், தேசபக்திக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சக்தி வழிபாட்டுக்கு ச.து.சுப்ரமணிய யோகியார், ஆன்மீகத்துக்கு சுத்தானந்த பாரதியார், உயிர்களிடத்தின் அன்பு வேண்டும் என்ற பாரதியின் கருத்தை வழிமொழிபவராக தேசிக விநாயகம் பிள்ளை, வசன கவிதைக்கு ந.பிச்சமூர்த்தி, பொதுவுடைமைச் சிந்தனைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணனைப் போற்றுவதற்கு கண்ணதாசன், பாரதியின் அறிவியல் சிந்தனைக்கு வழித்தோன்றலாக குலோத்துங்கன் (வா.செ. குழந்தைசாமி), பாரதி புகழ்ந்த ஜப்பானியக் கவிதையின் ஒரு வடிவமான ஹைக்கூ கவிதைக்கு ஈரோடு தமிழன்பன் என பாரதியின் வழித்தோன்றல்களாக பல படைப்பாளர்கள் அவதரித்திருக்கின்றனர்.
பாரதியின் சிந்தனைகள் வெளிப்படும் கவிதைகள், படைப்புகள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளின் மூலம் எவ்வாறு வெளிப்பட்டனர் என்பதை நூலாசிரியர் மிக விளக்கமாக, தெளிவாக ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பாரதி என்றும் மறைந்துவிடமாட்டார்; அவர் புதிய வடிவங்களில் அவதாரம் எடுப்பார் என்பதை சான்றுகளுடன் நிறுவும் குறிப்பிடத்தக்க நூல்.
நன்றி: தினமணி, 28/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818