வீரப்பன் மரணம் யாரால் எப்படி?

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் வெளியீடு, பக். 312, விலை 300ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் மரணம் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகம். வீரப்பனை சந்தித்து நக்கீரன் குழுவினர் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறன்மனை நோக்கா ஒழுக்க சீலன், பெண்களை மதிப்பவன் என்று நூல் முகப்பில் சித்தரிக்கப்படும் வீரப்பன், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடிப் படையின் தேடலில் ராஜதந்திரம் தெரிந்தாலும், மலைவாழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன. அது […]

Read more

அமைப்பாய்த் திரள்வோம்

அமைப்பாய்த் திரள்வோம், தொல்.திருமாவளவன், நக்கீரன் வெளியீடு, விலை 450ரூ. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தில் தனது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு அரசியல் அமைப்பில் பணியாற்ற எப்படியான ஒழுங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப் பதிவுசெய்திருக்கிறார். சமூகம், அரசியல் பொருளாதாரம், கலாச்சாரம் என அமைப்பு என்பது என்னவாக இருக்கிறது? அமைப்பின் நோக்கம், இலக்கு, கொள்கை, வடிவம், விதிமுறைகள் என்னென்ன? மிக முக்கியமாக, மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும் என பல்வேறு அமைப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடுகிறார் திருமாவளவன். நன்றி: தி […]

Read more

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம், சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு, விலை 80ரூ. 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். பிறகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்து சாதனை படைத்தார். திரைப்படத்துறையில், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகள் பற்றிய சுவைபட எழுதியுள்ளார் சபீதா ஜோசப். எம்.ஜி.ஆர். பற்றிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

முருகன் திருவிளையாடல்

முருகன் திருவிளையாடல், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம், விலை 130ரூ. இந்த நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள், சிவபக்தியின் களஞ்சியமாகத் திகழ்வதுடன், முருகப் பெருமான் புரிந்த திருவிளையாடல்களும் பக்தர்களின் நெஞ்சை உருக்கிப் பரவசம் தரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- ஒப்பனைக்காரன், இள. அழகிரி, நக்கீரன் வெளியீடு, விலை 200ரூ. ஏவி.எம். ஸ்டூடியோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக “மேக்கப்மேன்” ஆகப் பணியாற்றியவர் எஸ். முத்தப்பா. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ரஜிகாந்த், கமல்ஹாசன் உள்பட எல்லா பிரபல நட்சத்திரங்களுக்கும் “மேக்கப்” போட்டவர். […]

Read more

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள்

சிறுகதை மன்னன் ஜே.கே. 100 அரிய தகவல்கள், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 110ரூ. ஜெயகாந்தன் பற்றிய 100 அரிய தகவல்கள் அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழ் இலக்கிய உலகில் புரட்சிசெய்தவர். அவருடைய சிறுகதைகளிலும், நாவல்களிலும் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, உயிரும், உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஜெயகாந்தன் சினிமா உலகத்திலும் தடம் பதித்தவர். உலகப்புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரேயின் சாருலதா, அகில இந்திய ரீதியில் முதல் பரிசு வாங்கியபோது இவருடைய உன்னைப்போல் ஒருவன் மூன்றாம் பரிசு பெற்றது. ஜெயகாந்தன் பற்றிய அரிய […]

Read more

நீதிக்கட்சி வரலாறு (1616-1944)

நீதிக்கட்சி வரலாறு (1616-1944), க. திருநாவுக்கரசு, நக்கீரன் வெளியீடு, விலை 1200ரூ. நூற்றாண்டு விழாவை நெருங்கிகொண்டு இருக்கும் திராவிட இயக்கத்தின் முதல் 30 ஆண்டு கால முழுமையான வரலாறு இது. திராவிடர் இயக்க வரலாற்றுக் கணினி என்று பாராட்டப்பட்ட க. திருநாவுக்கரசு தனது அதீதமான உழைப்பால் இதை உருவாக்கியிருக்கிறார். அடுத்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முழுமையான வரலாற்றையும் அவர் பரபரப்பாய் எழுதி வருகிறார். பலரது கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட வேண்டிய, பெரிய உழைப்பு தேவைப்படும் ஒரு பணியை தனி […]

Read more

யாரும் காணாத உலகம்

யாரும் காணாத உலகம், கோவி. லெனின், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 45ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-335-6.html பத்திரிகையாளர் கேவி.லெனின் ஒரு கவிஞரும்கூட என நிரூபிக்கும் நூல் இது. எளிய வார்த்தைகளில் சமூக அக்கறையும், பால்யத்தின் நினைவுகளும், காதலும் விரவிக்கிடக்கும் கவிதைத் தொகுப்பு இது. இயற்கையை கவிதைக்கு துணைக்கு அழைத்துக் கொள்ளும் கவிஞரின் சொற்கள் மிக இயல்பாக உள்ளன. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- மார்க்சிய சூழலியல், அருண் நெடுஞ்செழியன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, […]

Read more

முதல் கோணல்

முதல் கோணல், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 60ரூ. பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல். அரசியல், சமூகம் சார்ந்த கருத்துக்கள் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. சமகால நிகழ்வுகள் குறித்த அபிப்ராயங்கள் மூலம் வாசகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் எளிமையான மொழியில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் நூல் இது. நன்றி: குங்குமம், 23/6/2017.   —- கட்டற்ற மென் பொருள் ஜிம்ப் 2.8, ஜெ. வீரநாதன், கோவை, விலை 190ரூ. போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் ஜிம்ப் 2.8. மென்பொருளை பயன்படுத்தும் விதம்குறித்து தெளிவாக விளக்கும் […]

Read more

நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- கசடறக் கற்க […]

Read more

ஐரோம் ஷர்மிளா

ஐரோம் ஷர்மிளா, க. சிவஞானம், நக்கீரன் வெளியீடு, சென்னை 14, பக். 120, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-082-6.html என் உடலே என் ஆயுதம் என்று 12 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஷர்மிளாவின் கோரிக்கை. தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதாகக் கூறி, சாதாரண மக்களை நசுக்கவே இந்தச் சட்டம் பயன்படுகிறது என்பது […]

Read more
1 2