எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்

எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம், சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு, விலை 80ரூ. 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். பிறகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்து சாதனை படைத்தார். திரைப்படத்துறையில், அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகள் பற்றிய சுவைபட எழுதியுள்ளார் சபீதா ஜோசப். எம்.ஜி.ஆர். பற்றிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.

Read more

உங்கள் சத்யராஜ்

உங்கள் சத்யராஜ், சபீதா ஜோசப், குமரன் பதிப்பகம், விலை 150ரூ. சத்யராஜ் வாழ்க்கைப்பாதை நடிகர் சத்யராஜின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் “உங்கள் சத்யராஜ்”. சத்யராஜே தன்னைப் பற்றிய சுவையான சம்பவங்களைக் கூறுவதுபோல் இதை எழுதியுள்ளனர், பிரபல எழுத்தாளர் சபிதா ஜோசப். சத்யராஜ், ஜமீன்தார் வீட்டுப்பையன். ஆயினும் சினிமா நடிகராக ஆசைப்பட்டார். சோதனைகளையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்தார். தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது சிவாஜிகணேசனின் ஆசை. ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. பெரியாராக நடித்தவர் சத்யராஜ்தான். இப்படி ஏராளமான சுவையான, […]

Read more

என்றென்றும் விஜய்

என்றென்றும் விஜய், சபீதா ஜோசப், குமுதம் பு(து)த்தகம், பக். 112, விலை 110ரூ. நடிகர் விஜய் தான் கடந்து வந்த பாதையை, தான் அனுபவித்த சிக்கல்களை அதிலிருந்து விடுபட அவர் மேற்கொண்ட கடின உழைப்பை, திறந்த மனதோடு இந்நூலில் சொல்லிச் செல்கிறார். குறிப்பிட்ட துறையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற தீராவேட்கை கொண்ட எல்லோருக்குமே இந்தப் புத்தகம் பிடிக்கும். அதிலும் விஜயின் தீவிரமான ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். குமுதத்தில் தொடராக வந்தபோது பல லட்சம் வாசகர்களால் பாராட்டப்பட்டது. அதை தொகுத்து குமுதம் […]

Read more

ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

யான் பெற்ற பயிற்சிகள்

யான் பெற்ற பயிற்சிகள், மாக்சிம் கார்க்கி, தமிழில்-ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-1.html தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர். தனது 10 வயது முதல் […]

Read more