என்றென்றும் விஜய்
என்றென்றும் விஜய், சபீதா ஜோசப், குமுதம் பு(து)த்தகம், பக். 112, விலை 110ரூ.
நடிகர் விஜய் தான் கடந்து வந்த பாதையை, தான் அனுபவித்த சிக்கல்களை அதிலிருந்து விடுபட அவர் மேற்கொண்ட கடின உழைப்பை, திறந்த மனதோடு இந்நூலில் சொல்லிச் செல்கிறார்.
குறிப்பிட்ட துறையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற தீராவேட்கை கொண்ட எல்லோருக்குமே இந்தப் புத்தகம் பிடிக்கும். அதிலும் விஜயின் தீவிரமான ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.
குமுதத்தில் தொடராக வந்தபோது பல லட்சம் வாசகர்களால் பாராட்டப்பட்டது. அதை தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 8/6/2016.