ஜுலயஸ் சீசர்
ஜுலயஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 110ரூ.
உலகை வசப்படுத்திய ஒரு மாவீரனின் கதை இது. சீசரின் காதல், வீரம், தலைமைப்பண்பு, போர்த்திறன், அரசியல், உத்திகள், மனிதநேயம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நூலில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 8/6/2016.
—–
திருக்குறள் அகர வரிசையில் தெளிவுரை, வெளியீடு பொ.கிருஷ்ணன், விலை 100ரூ.
அகர வரிசையை முதன்மைப்படுத்தி திருக்குறளை மனப்பாடம் செய்ய ஏற்ற நூலாக உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் பானுமதி கிருஷ்ணன். அகரத்தில் தொடங்கும் 157 குறளையும், பிற எழுத்துக்களில் உள்ள குறளையும் வரிசைப்படுத்தியுள்ளார். எளிய சொற்கள், குறைந்த வரிகளைக் கொண்டு மனப்பாடம் செய்ய வாய்ப்பாக அமைந்த முயற்சியை பாராட்டலாம்.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.