யான் பெற்ற பயிற்சிகள்

யான் பெற்ற பயிற்சிகள், மாக்சிம் கார்க்கி, தமிழில்-ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-1.html

தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர். தனது 10 வயது முதல் தினசரி குறிப்பேடு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் கார்க்கி. அதில் தனது சிறு வயது அனுபவங்களை குறித்து வைத்தார். அவர் பல்வேறு கவிதைகள், நாவல்கள் எழுதிய போதும் அவரது சுயசரிதை இன்றும் பலரை ஈர்த்து வருகிறது. அவர் எழுதிய சுயசரிதையின் இரண்டாம் பகுதியான இதில், அவர் செருப்புக் கடையில் வேலை செய்தது, சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சவாலால், ஒரு நாள் இரவை மயானத்தில் கல்லறை ஒன்றின் மீது படுத்தபடி கழித்தது, புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடங்கியுள்ளன. மொழிபெயர்ப்பு சரளமாக இல்லாவிடினும், படிப்பதற்கு ஏதுவாகவே உள்ளது. -சொக்கர். நன்றி: தினமலர், 16/10/11.  

—-

 

விவேகானந்தரின் ஆளுமைச் சிந்தனைகள், சபீதா ஜோசப், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 72, விலை 25ரூ.

இந்தியா தன்னுடைய வீரத்தையெல்லாம் இழந்து, கோழையாகி விட்டிருந்த நேரத்தில் இந்த நாடே ஆண்மையற்றுத் தூள் தூளாகச் சிதறிப்போன காலத்தில், அவர் இந்திய நாட்டிற்கு ஆண்மையையும் வீரத்தையும் ஊட்டினார் என, ஜவஹர்லால் நேருவால் குறிப்பிட்டிருக்கிறார். நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது. துன்பங்களில் வாழும்போது, எப்படி பொறுமையாக இருப்பது, நிர்கதியான நேரங்களில் எப்படி நம்பிக்கை இழக்காமல் இருப்பது, மனம் தளரும் நேரங்களில் எப்படி துணிவுடன் திகழ்வது என்பதை விவேகானந்தர் நமக்குக் கற்றுத் தந்தார் என, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களாலும் போற்றப்பட்ட சுவாமி விவேகானந்தரின் நூறு சிந்தனைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. -பின்னலூரான். நன்றி: தினமலர் 16/10/11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *