பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா
பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 560, விலை 300ரூ.
பகவத் கீதையை ஏதோ மதம் சார்ந்த ஒரு கோட்பாடு அல்லது கொள்கை என்று பார்க்கக்கூடாது. அது மனித வாழ்வின் அகச் செயல்பாடுகளை அலசி ஆராய்வதாகும். உளவியலின் ஊற்றுக்கண் பகவத்கீதை என்பதே சரி. அந்த உளவியல் கோட்பாடுகளை விளக்கி அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த உரையின் நோக்கம். உளவியல் கோட்பாடுகளை அவற்றிலிருந்து தனியே பிரித்து எடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுவதே சுவாமி ராமா அவர்களின் இந்த உரையின் நோக்கமாகும். வேதங்கள், உபநிஷதங்கள் எல்லாம் இருக்கையில் பகவத்கீதை தேவையா? என்ற கேள்விஎழலாம். அதற்கான பதிலை, அனைவருக்கும் புரியும் விதத்தில் அமைக்கப்பட்ட விளக்கவுரை இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 3/7/2013.
—-
கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 28, பக். 140, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html
ஜார் மன்னன் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி, உலகிலேயே முதல் வல்லரசு நாடாக சோவியத் ரஷ்யாவை மாற்றுகிறார் லெனின். அத்தகைய சாதனையாளரின் நினைவிடத்தை பார்த்தாக வேண்டும் என்று நடிகர் ராஜேஷ் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட பயணம்தான் கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா என்ற இந்த நூல். ஒரு பயணியாக ரஷ்யாவுக்குள் உலாவந்தவர், கம்யூனிஸத்தின் ஆணிவேர் வரை நம்மை தொட்டுப் பார்க்க வைக்கிறார். 70 ஆண்டுகளாக சமதர்ம ஆட்சி நடந்த நாட்டில் எப்படி இவ்வளவு கோடீஸ்வரர்கள் முளைத்தார்கள்? கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்த பின், நாடு அடைந்துள்ள சீர்கேடுகள் உள்ளிட்ட அனைத்தையும் படிப்போர் மனதில் பதியும் வண்ணம் இந்நூலை ஒரு ஆவணமாகத் தீட்டியுள்ளார் ராஜேஷ். நன்றி: குமுதம், 3/7/2013
