ஈழக்கனவும் எழுச்சியும்
ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ.
தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். போர் முடிந்தபின் நடைபெற்ற சம்பவங்கள், இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் முதலான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி அறிய அருமையான புத்தகம். நன்றி: தினத்தந்தி.
—-
மனதைத் தொட்ட மக்கள் திலகம், சபீதா ஜோசப், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
எம்.ஜி.ஆர். பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த புத்தகத்தில், எம்.ஜி.ஆரை கலை உலகினர் பல்வேறு கோணங்களில் பார்த்து, கட்டுரைகளாக வடித்துள்ளனர். ஜெயலலிதா, நடிகர்கள் விஜயகாந்த், எஸ்.எஸ். ராஜேந்திரன், பிரபு, சத்யராஜ், ராஜேஷ், சோ, நடிகைகள் மஞ்சுளா, லதா, சச்சு, இயக்குனர்கள் பி.வாசு, ஏ.சி. திருலோகசந்தர் உள்பட பலர், எம்.ஜி.ஆருடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட வர்ணித்துள்ளனர். கண்ணுக்கினிய படங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன. அச்சு அருமை. நன்றி: தினத்தந்தி.