நாடாளுமன்றம் 2014

நாடாளுமன்றம் 2014, இரா. பாஸ்கர், ஸரிகமபதநி, சென்னை, விலை 100ரூ.

முடிவுகள் சொல்லும் கணக்கு நாடாளுமன்றத் தேர்வு முடிந்து ஏழு மாதங்கள் உருண்டோடிவிட்டன. உங்கள் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பெற்ற வாக்குகளைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் முன்னிலை பெற்ற கட்சி எது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தத் தகவல்களை அவ்வளவு சுலபமாகத் திரட்டிவிட முடியாது. ஆனால் இரா. பாஸ்கர் தொகுத்து வழங்கியுள்ள நாடாளுமன்றம் 2014 என்ற நூலைப் படித்தால் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும் முன்னிலை பெற்ற கட்சியை அறிந்துகொள்ள முடியும். தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே இருக்கிறது. சட்டப்பேரவை வாரியாகக் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் அடங்கிய இந்த நூல், அரசியல் கட்சிகளுக்கும் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் வரப்பிரசாதம். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்நூல் ஒரு காலப்பெட்டகமாக நிச்சயம் இருக்கும். -மிது. நன்றி: தமிழ் இந்து, 3/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *