நல்ல நிலம்
நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-377-2.html வாழ்ந்த மண்ணில் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து, வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறிந்த இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்ப்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து வந்து, அவனை ஏங்கித் தவிக்க வைக்கிறது. கி.பி. 1895-1986 தொடங்குகிறது கதை. கீழத்தஞ்சையின் 100 ஆண்டுகால வரலாற்றைச் சுற்றி சுழல்கிறது. இதில் வரும் நிகழ்வுகளும் அவற்றின் சரித்திர நாயகர்களும் நிஜம். விறுவிறுப்பான நடையில் அருமையாக இந்த புதினத்தைப் படைத்திருக்கிறார் பாவைசந்திரன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
வரலாறு படைத்த வைரமங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ.
நாட்டுக்கு உழைத்து, வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினிதேவி, அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி சுவாமிநாதன், துர்காபாய், தேஷ்முக் உள்பட 16பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியுள்ளன. இதன் விலை 150ரூ. நன்றி: தினத்தந்தி, 14/1/2015.