யாரும் காணாத உலகம்

யாரும் காணாத உலகம், கோவி. லெனின், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 45ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-335-6.html பத்திரிகையாளர் கேவி.லெனின் ஒரு கவிஞரும்கூட என நிரூபிக்கும் நூல் இது. எளிய வார்த்தைகளில் சமூக அக்கறையும், பால்யத்தின் நினைவுகளும், காதலும் விரவிக்கிடக்கும் கவிதைத் தொகுப்பு இது. இயற்கையை கவிதைக்கு துணைக்கு அழைத்துக் கொள்ளும் கவிஞரின் சொற்கள் மிக இயல்பாக உள்ளன. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.   —- மார்க்சிய சூழலியல், அருண் நெடுஞ்செழியன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள். இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘   —- மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு. பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more

மரபும் மரபு சார்ந்தும்

மரபும் மரபு சார்ந்தும், முனைவர் ஓ. முத்தையா, காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை 24, பக். 204, விலை 160ரூ. கள்ளிக்காட்டில் முள்ளை வெட்டி அடுக்கிக் கொண்டிருந்த வேலாயி இடுப்புவலி எடுத்து வேலி மறைவில் தனது மூன்றாவது பிள்ளையைத் தனியாளாய் பெற்றெடுத்தாள். மரபு அவளுக்கு அத்தகைய வலிமையைக் கொடுத்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவம் தாய்க்கும் பிள்ளைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலித்து கட்டாயக் கத்திரி போடுகிறது. மரபு தரும் இந்த வலிமையையும் துணிச்சலையும் மண்மூடிப் போகும்முன் பாதுகாக்கவாவது செய்யலாமே? என்பதுதான் நூலாசிரியரின் […]

Read more

விதைகள் தொகுப்பு நூல்

விதைகள் தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010, விலை 70ரூ. இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் என்ற பெயரில் […]

Read more

கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more

விதைகள்

விதைகள், தொகுப்பு நூல், வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10, விலை 70 ரூ. இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் […]

Read more