வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்
வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ.
குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.
—-
மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ.
காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். காடுகள் சிதைக்கப்படுவதை சூழலியல் சார்ந்த அக்கறையுடன் விவரிக்கிறது. காடுவாழ் உயிரினங்கள், பழங்குடியின மக்கள் போன்றோரின் சிதையும் வாழ்வும், சுரண்டப்படும் இயற்கைவளம் குறித்தும் அதன் பின்னணி அரசியலையும் பேசுகிறது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.
—-
நீர்ப்பாலை, சுப்ரபாரதி மணியன், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், விலை 50ரூ.
சுப்ரபாரதி மணியன் சமூக அக்கறையுடன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். சுற்றுச்சூல், கல்வித்துறை சிந்தனைகள், காணாமல்போன நொய்யல் ஆறு, உலகமயமாக்கல், பொருளாதாரம் போன்றவை குறித்த தன் அனுபவங்களை எழுதுகிறார். இலக்கியம், சமூகம் என்று பல தளங்களில் விரிகின்றன கட்டுரைகள். நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.