தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, பக். 240, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-232-1.html காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார். கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் இல்லாத நிலையிலும், நூலாசிரியரின் அயராத தேடல், புதிய தகவல்களை நமக்கு தருகிறது. எளிமையே எனது வாழ்க்கை என்று வாழ்ந்த காந்தியையும், கக்கனையும் பல இடங்களில் ஆசிரியர் உதாரணங்களோடு ஒப்பிட்டுள்ளார். இன்றைய அரசியல்வாதிகள் கவனித்து படிக்க வேண்டிய புத்தகம். -ஜீ.வீ.ஆர். நன்றி: தினமலர், 15/5/2014.  

—-

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், கே. சந்துரு, உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), மணற்கேணி பதிப்பகம், பக். 120, விலை 95ரூ.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, சமூக அக்கறை கொண்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். டாக்டர் அம்பேத்கர் மாபெரும் சட்ட நிபுணர் என்பதும், இந்திய சமூக வாழ்வில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒளி தர முயன்று, அம்முயற்சியில் வெற்றி பெற்றவர் என்பதும் வரலாறு. அவரது லட்சிய உலகம் தங்குதடைகளற்ற சுதந்திரமானது, அறிவொளி மிக்க இந்தியா உருவாக விரும்பி, அதற்கான சிந்தனை விதைகளை விதைத்தவர். அவர் கண்டபாதையுல் சுதந்திரத்தை தனிமனிதரும் போராடிப் பெற வேண்டும் என்ற அடிப்படையில், நீதியரசர் தனது பதவிக்காலத்தில், அளித்த தீர்ப்புகள் நூலாக மலர்ந்திருக்கிறது. அம்பேத்கர் பார்வையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகள் சமூகநீதி காக்க, சமுதாயத்தை வளப்படுத்த உதவும் என்று, பதிப்பாசிரியர் ரவிக்குமார் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றியபோது, அளித்த தீர்ப்புகளில் மாமேதை அம்பேத்கர் கூறிய கருத்துகளையும் அப்படியே ஆங்கிலத்தில் தந்திருப்பது இந்த நூலைப் படிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் நல்ல தெளிவைத்தரும். வரவேற்கத்தக்க நல்ல முயற்சி இது. -தவசி. நன்றி: தினமலர், 15/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *