கடாரம்
கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ.
பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது நம் நாட்டில் இல்லையே என்ற வருத்தம் எழுகிறது. கதையின் களம் சோழப் படையெடுப்பை கற்றியிருந்தாலும் சோழ அரச குலத்தின் வாழ்க்கையை மட்டும் சொல்லாமல், அக்கால வணிகர்களைச் சுற்றியும் கதை பின்னப்பட்டிருப்பதும் ரசிக்கும்படியாக இருக்கிறது. எவ்வளவுதான் சமூக நாவல்களையும், இலக்கியங்களையும் நாம் படித்தாலும் சரித்திர நாவல் என்றால் ஒரு தனியிடம் எப்போதும் உண்டு. கதை முடிந்தாலும் கடாரம் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது. நன்றி: தினமணி, 2/6/2014.
—-
குரு ராகு கேது பெயர்ச்சி பலன்கள், அதர்வண ஸ்ரீ அண்ணா சுவாமிகள், விஜயா பதிப்பகம், சென்னை, விலை 25ரூ.
வருகிற ஜுன் 13ந் தேதி, குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதன் பின் ஜுன் 20ந் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கின்றன. இதனால் 12 ராசிகளுக்கும் ஏற்பட இருக்கும் பலன்களும், அதற்கான பரிகாரங்களும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.