நிழலற்ற பயணம்
நிழலற்ற பயணம், தலித்வாடாவிலிருந்து தலைநகர் வரை, பி.ஆர்.சுபாஷ்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், பக். 476, விலை 300ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-000-7.html மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவருமான, சுஷில்குமார் ஷிண்டேயின், வாழ்க்கை வரலாற்று நூல். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறப்பு, 5ம் வகுப்பு வரை கல்வி, தந்தை மறைவால் படிப்புக்கு முற்றுப்புள்ளி, தாய்க்கு உதவ, வீட்டு வேலையாளாக சேர்தல், இடையே இரவுப் பள்ளியில் படிப்பு, நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்தல் என, ஷிண்டோயின் வாழ்க்கை, சாதாரண இந்தியனின் வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. அதன்பின், படிப்படியாக எம்.எல்.ஏ.ஆனது, அமைச்சர், முதலமைச்சர், ஆந்திரமாநில கவர்னர், எம்.பி., மத்திய அமைச்சர் என ஷிண்டேயின் வளர்ச்சி குறித்து இந்த நூல் விளக்குகிறது. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 8/6/2014.
—-
அம்பேத்கரின் புவியியல் சிந்தனைகள், மு. நீலகண்டன், அலைகள் வெளியீட்டகம், பக். 152, விலை 100ரூ.
பொதுவாக அம்பேத்கரை பற்றி நினைக்கும்போது அவர் ஒரு சட்டமேதை, அரசியல், பொருளியல், சட்டவியல், மானிடவியல், சமூகவியல் ஆகிய பலதுறைகளில் தெளிவான அறிவு பெற்று ஒரு பன்முகப் பேரறிவாளராக திகழ்பவர் என்பது பரவலான எண்ணம். ஆனால் அவர், புவியியல் தொடர்பான சிந்தனைகளை உடையவர் என்பதும், அதன் தொடர்பான திட்ட பணிகளை மேற்கொண்டவர் என்பதம் இந்த நூல் தரும் புதிய செய்தி. இன்று இந்தியாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் நதிநீர் இணைப்பு, அதன் அவசியம், நீர்சேமிப்பின் முக்கியத்துவம் இவை பற்றி, 70 ஆண்டுகளுக்கு முன்பே, அம்பேத்கர் எடுத்து, சொல்லியிருப்பதை, தெளிவான விவரங்களுடன் ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். மிகவும் பாராட்டத் தக்க முயற்சி. இந்த நூலை அரசியல் மேதைகள் படித்து, செயலாக்க முயற்சி செய்தால், பாரதத்திற்கு விடிவு காலம் பிறக்கும். -கேசி. நன்றி: தினமலர், 8/6/2014.