கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை
கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை, வானதி பதிப்பகம், சென்னை, விலை 140ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-3.html கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் இருந்து, பக்தி, காதல், சோகம், தத்துவம், பல்சுவை என ஐந்து வகைப்பட்ட தலைப்பின் கீழ் வரும் பாடல்களைத் தேர்வு செய்து விளக்கி எழுதியிருக்கிறார் காவிரி மைந்தன். காலத்தை வென்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் கவியரசரின் பாடல்கள் பற்றி, விரிவான ஒரு பகுப்பாய்வை சுவைபட செய்திருக்கிறார் நூலாசிரியர். -ஜனகன். நன்றி: தினமலர், 25/5/2014.
—-
நிழலாய்த் தொடரும் நிஜங்கள், பிரதிபா, நக்கீரன் பிரசுரம், சென்னை, விலை 50ரூ.
தில்லி பாலியல் வன்முறையில் பலியான நிர்பயா போன்றோரின் மனசாட்சி தன்னுடன் பேசுவது போன்ற கற்பனையில் தொடங்கி தன் மனதில் உறங்கிக்கிடக்கும் விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்கிறார் பிரதீபா. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அக்கறையை பதிவு செய்வதோடு சமூகத்தை கேள்வியும் கேட்கிறது நூல். நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.